ஹைதராபாத்தில் சிம்புவை சந்தித்த மகேஷ் பாபு!

  திஷா   | Last Modified : 26 Nov, 2018 04:42 pm
mahesh-babu-met-simbu-in-vrv-spot

தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற  ‘அட்டாரிண்டிகி தாரேடி’ திரைப்படத்தை தமிழில் ரீமேக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. இதற்கு 'வந்தா ராஜாவா தான் வருவேன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

‘லைகா புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தில் ஹீரோவாக சிம்பு நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார். அதோடு கேத்ரின் தெரெஸா, ரம்யா கிருஷ்ணன், மஹத், யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். 

பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ள இந்தப் படத்தின் படபிடிப்பு ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பரபரப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்தப் படபிடிப்பின் போது தெலுங்கின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவும் சிம்புவும் சந்தித்திருக்கிறார்கள். அந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close