கடந்த 2 ஆண்டுகளாக டப்பிங் யூனியனில் 95 பேர் சந்தா செலுத்தவில்லை: சின்மயி

  ஐஸ்வர்யா   | Last Modified : 26 Nov, 2018 07:10 pm

chinmayi-tweet-about-dubbing-union-issues

தமிழில் பிரபல பாடகியான சின்மயி, பல முன்னணி நடிகைகள் நடிக்கும் படங்களில் அவர்களுக்கு டப்பிங்கும் பேசி வருகிறார். சமீபத்தில், வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘96' படத்தில் கூட த்ரிஷாவுக்கு சின்மயி தான் பின்னணி குரல் கொடுத்திருந்தார். சின்மயி டப்பிங் யூனியனில் உறுப்பினராக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த நவம்பர் 19-ஆம் தேதி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக டப்பிங் யூனியன் அமைப்பு அறிக்கை வெளியிட்டது.

 

இந்நிலையில், சின்மயி கடந்த வாரம் தனது ட்விட்டர் பக்கத்தில் "கடந்த 2 வருடங்களாக டப்பிங் யூனியனுக்கு சந்தா செலுத்தவில்லை எனக்கூறி என்னை டப்பிங் யூனியனிலிருந்து நீக்கம் செய்துள்ளனர். எந்தவொரு தகவலும் எனக்கு இதுதொடர்பாக அளிக்கப்படவில்லை. அந்த தொகையைத் திரும்ப செலுத்தினாலும் எனது உறுப்பினர் அந்தஸ்து திரும்பக் கிடைக்குமா? என்பது தெரியவில்லை.  எனினும் இந்த 2 வருடங்களில் எனது சம்பளத்திலிருந்து 10% தொகையை யூனியன் எடுக்கத் தவறியதில்லை. இதன் பிறகு மற்ற படங்களுக்கு என்னால் குரல் கொடுக்க முடியுமா எனத் தெரியவில்லை" என பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் தற்போது சின்மயில் தனது ட்விட்டர் பக்கத்தில், “டப்பிங் யூனியனில் 95 பேர் 2016-ஆம் ஆண்டில் இருந்தே சந்தா செலுத்தாமல் இருக்கின்றனர். ஆனால், என்னை மட்டுமே அவர்கள் நீக்கியுள்ளனர். நான் 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதியே எனது ஆயுட்கால சந்தா தொகையை வங்கி மூலமாக செலுத்தி விட்டேன்” என்று பதிவிட்டுள்ளார். 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close