10 ஆண்டுகளுக்கு பிறகு யுவன்-தனுஷ் கூட்டணி: நாளை சிங்கிள் ரிலீஸ்

  Newstm Desk   | Last Modified : 27 Nov, 2018 08:35 am
mari-2-first-single-from-november-28

யுவன் இசையில் உருவாகி உள்ள மாரி 2 படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாக உள்ளது. 

கடந்த 2010ம் ஆண்டு வெளியான மாரி படத்தின் இரண்டாம் பாகமாக மாரி 2 உருவாகி வருகிறது. தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலாஜி மோகன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

படத்தின் பணிகள் முடிவடைந்து டிசம்பர் மாதத்தில் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தனர்.

 

 

10 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இணைந்திருப்பதால் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பதில் சொல்லும் விதமாக படத்தின் முதல் பாடல் குறித்த செய்தியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘ரவுடி பேபி’ என்ற படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை தனுஷ் எழுதியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close