வரவேற்பு பெற்று வரும் பரியேறும் பெருமாள் மேக்கிங் வீடியோ!

  திஷா   | Last Modified : 27 Nov, 2018 10:42 am
pariyerum-perumal-making-video

கடந்த செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் பரியேறும் பெருமாள். இயக்குநர்கள் ராம் மற்றும் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மாரி செல்வராஜ் இதனை இயக்கியிருந்தார். 

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கதிர், ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். சமூகத்தில் வேர் பரப்பி கிடக்கும்  சாதிய கொடுமைகளை திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டிய இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. 

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். 

இந்நிலையில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. நடனம், சண்டை, ஆக்ரோஷம், அழுகை என அனைத்தையும் மாரி செல்வராஜ் நடித்துக் காட்ட அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு நடிகர்கள் செய்திருக்கிறார்கள். படத்தைப் போல இந்த வீடியோவும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close