22 வருட நட்பு, லவ் யூ விஜிமா - வைரலாகும் ஶ்ரீமனின் ட்விட்டர் பதிவு

  திஷா   | Last Modified : 27 Nov, 2018 11:44 am
sriman-s-tweet-about-vijay

நடிகர் விஜய்யின் நண்பர்களில் முக்கியமானவர் நடிகர் ஶ்ரீமன். லவ் டுடே திரைப்படத்தில் இவர்கள் இருவரும் முதன் முதலில் ஒன்றாக இணைந்து நடித்தார்கள். தொடர்ந்து நிலாவே வா, நெஞ்சினிலே, ஃப்ரெண்ட்ஸ், வசீகரா, போக்கிரி, அழகிய தமிழ் மகன், வில்லு, சுறா, பைரவா எனப் பல படங்களில் விஜய்யுடன் நடித்துள்ளார் ஶ்ரீமன். 

தனது நண்பர்களுக்கான நேரத்தையும் முக்கியத்துவத்தையும் தருவது விஜய்யின் சிறப்பான குணங்களில் ஒன்று. அதனால் தான் இவரின் பெரும்பாலான நண்பர்கள் 20 வருடத்திற்கும் மேற்பட்ட சிநேகத்தைக் கொண்டிருக்கிறார்கள். 

அந்த வகையில் நடிகர் ஶ்ரீமன் தற்போது விஜய்யை சந்தித்திருக்கிறார்."ஒவ்வொரு சந்திப்பின் போதும் நிறைய பாஸிட்டிவ் எண்ணங்களைப் பெறுகிறேன். 22 வருட நட்பு. ஆதரவு, வழிகாட்டுதல் அனைத்திற்கும் நன்றி. உங்களின் பணிவு, எளிமை, அமைதியாக உதவி செய்யும் குணம் ஆகியவற்றால் அதிகம் ஈர்க்கப்படுகிறேன். விஜிமா லவ் யூ, நேரம் ஒதுக்கியதற்கு நன்றி" என சந்திப்பின் போது விஜய்யுடன் எடுத்துக் கொண்ட படங்களுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஶ்ரீமன். 

— actor sriman (@ActorSriman) November 26, 2018

ஶ்ரீமனின் இந்த பதிவு தற்போது விஜய் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close