யூ சான்றிதழ் பெற்ற சார்லி சாப்ளின் 2!

  திஷா   | Last Modified : 27 Nov, 2018 01:15 pm
charlie-chaplin-2-censor-details

கடந்த 2002-ம் வருடம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் சார்லி சாப்ளின். நடிகர்கள் பிரபு, பிரபுதேவா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்தப் படத்தை இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கியிருந்தார். 

சார்லி சாப்ளின் வெளியாகி 16 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், தறபோது இதன் இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. சக்தி சிதம்பரம் இயக்கும் இதிலும் பிரபு, பிரபுதேவாவே ஹீரோக்களாக நடிக்க, நிக்கி கல்ராணி ஹீரோயினாக நடித்திருக்கிறார். 

அம்ரீஷின் இசையில் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் 'சின்ன மச்சான்' என்ற பாடல் பட்டி தொட்டிகளில் பேய் ஹிட்டாகி உள்ளது. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இதனைத் தயாரித்திருக்கிறார். 

இந்நிலையில் சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள் சென்சார் அதிகாரிகள். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close