ரஜினியின் எந்திரன் பின்னணி இசை வெளியீடு!

  திஷா   | Last Modified : 27 Nov, 2018 03:23 pm
enthiran-full-bgm-releasing-tomorrow

கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி இந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இணைந்தப் படம் 'எந்திரன்'. இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்திருந்தது. 

இதில் வசீகரன் என்ற பேராசிரியராகவும், சிட்டி என்ற ரோபோவாகவும் நடித்து, நம்மை தெறிக்க விட்டிருந்தார் நடிகர் ரஜினி. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். இவர்களுடன் சந்தானம், கருணாஸ், கொச்சின் ஹனீபா உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த எந்திரனின் பாடல்கள் அனைத்தும் செம்ம ஹிட். அதோடு இவரின் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது. 

இந்நிலையில் நாளை மாலை 6 மணிக்கு, எந்திரன் படத்தின் முழு பின்னணி இசையும் வெளியாவதாக, படத்தின் ஆடியோ உரிமத்தைப் பெற்றிருக்கும் 'திங்க் மியூஸிக்' நிறுவனம் அறிவித்துள்ளது. 

எந்திரனின் பின்னணி இசை, 2.0 திரைப்படத்தின் ரிலீஸ் என திக்கு முக்காடிப் போயிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close