சிலம்பம் சுழற்றி பார்வையாளர்களை ஈர்த்த சத்யராஜ்!

  திஷா   | Last Modified : 27 Nov, 2018 03:24 pm
sathyaraj-s-silambam-video-goes-viral

வில்லன், கதா நாயகன், குணச்சித்திரன் என வெவ்வேறு காலக் கட்டங்களில் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் சத்யராஜ். தவிர, காமெடியும், நையாண்டிப் பேச்சும் இவருக்கு கை வந்த கலை.'கடைக்குட்டி சிங்கம்', 'நோட்டா' ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு, தற்போது 'கனா', 'பார்ட்டி', 'மடை திறந்து', 'தீர்ப்புகள் விற்கப்படும்' ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் இவர் சமீபத்தில் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், இரண்டு கைகளிலும் சிலம்பத்தை எடுத்து மாற்றி மாற்றி சுழற்றி பார்வையாளர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். 

இந்த வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்து வரும் ரசிகர்கள், 'வயது எதற்கும் தடையல்ல' என மார்தட்டிக் கொள்கிறார்கள். அதனை சத்யராஜின் மகன் சிபிராஜுன் ரீ ட்வீட் செய்திருக்கிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close