ரஜினியின் 2.0 காலை காட்சிகள் ரத்து - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  திஷா   | Last Modified : 28 Nov, 2018 11:16 am
gaja-effect-no-special-morning-show-for-2-0

ரஜினி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது. எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இதனை, இயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கிறார். 

மிகப்பெரிய பட்ஜெட்டில் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இதனை பிரம்மாண்டமாகத் தயாரித்திருக்கிறது. ரஜினிக்கு ஜோடியாக ஏமி ஜாக்சன் நடித்திருக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் 2.0 திரைப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். 

வெகுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2.0 திரைப்படம் வெளியாகும் மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள் இருந்தாலும், காலை ஸ்பெஷல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மறுபுறம் சோக கீதம் வாசிக்கவும் செய்கிறார்கள் அவர்கள். 

ஆம், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் மாவட்டத்தில் 2.0-வின் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனை திருவாரூர் ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர் தாயுமானவன் அறிவித்துள்ளார். அதனால் திருவாரூர் ரஜினி ரசிகர்கள், 2.0-வைக் காண மதியம் வரை காத்திருக்க வேண்டும் இல்லையெனில் பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுக்க வேண்டும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close