சூர்யா ரசிகர்களுக்கு செல்வராகவனின் தாழ்மையான வேண்டுகோள்!

  திஷா   | Last Modified : 28 Nov, 2018 12:00 pm
selva-raghavan-s-tweet

இயக்குநர் விக்னேஷ் சிவனின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது 'என்.ஜி.கே' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குநர் செல்வராகவன் இயக்கும் இந்தப் படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி நடிக்கிறார்கள். 

படத்திற்கு இசை செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள். இந்நிலையில், என்.ஜி.கே படத்தின் அப்டேட்டுகளை கேட்டுக் கொண்டிருக்கும் சூர்யாவின் ரசிகர்களுக்கு தனது தாழ்மையான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார் செல்வா. 

இது சம்பந்தமான அவரின் ட்விட்டர் பதிவில், "நாங்கள் அமைதியாக, கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். சரியான நேரத்தில் அப்டேட்டுகள் உங்களை வந்தடையும். ஆனால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரம் ஒரு முறை அல்ல. நீங்கள் இன்னும் வலிமையை எங்களுக்குக் கொடுத்தால், எங்களால் இன்னும் கடினமாக உழைத்து, இலக்கை அடைய முடியும் என நம்புகிறோம்" என அவர் தெரிவித்திருக்கிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close