முன் அனுமதி இல்லாமல் என் பாடல்களை பாடாதீர்கள்: இளையராஜா எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2018 11:29 am
illayaraja-releases-video-about-copyrights-for-his-songs

தன் பாடலை பாட விரும்புகிறவர்கள் முன் அனுமதி பெற்று பாடுவதே முறையாகும் என்றும் இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இசைஞானி இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சில மாதங்களுக்கு முன்பு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வெளிநாட்டில் நடந்த இசை நிகழ்ச்சியில் தன் பாடல்களை அனுமதி இன்றி பாடக்கூடாது என்று இளையராஜா தெரிவித்திருந்தார். காப்புரிமை பிரச்னை காரணமாக இளையராஜா அவ்வாறு கூறியிருந்தார். அப்போது இந்த பிரச்னை பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

இந்நிலையில் தற்போது இதுகுறித்து இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "இசைக்கலைஞர்களே இது ஒரு புதிய அறிவிப்பு. என்னுடைய முன் அனுமதி பெறாமல், என் பாடல்களை பாட விரும்புகிற இசைக் கலைஞர்கள் முன் அனுமதி பெற்று அதற்குரிய வழிமுறைகளை செய்துவிட்டு பாடுவதே முறையானதாகும்.  இல்லையென்றால், சட்டப்படி குற்றமாகும். அனுமதியின்றி பாடுகிறவர்களோ, இசை குழுவினரோ... அப்படி செய்வது தவறு என்பதை நீங்கள் உணர வேண்டும். அப்படிச் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரை ஐபிஆர்எஸ் அமைப்பில் நான் உறுப்பினராக இருந்தேன். இப்போது உறுப்பினராக இல்லாத காரணத்தால், இதுவரை என் சார்பாக வசூலித்து கொண்டிருந்த ராயல்டி தொகையை, இனி நமது தென்னிந்திய திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் வசூலிக்கும். இதற்கான உரிமையை அச்சங்கத்துக்கு வழங்கியிருக்கிறேன்.

நீங்கள் பாடுவதற்கு நான் இடைஞ்சல் செய்யவில்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். பணம் வாங்கி கொண்டுதான் நீங்களும் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள். என் பாடலுக்கு பாடுபவர்கள் பணம் வாங்குகிறார்கள். அதில் எனக்கு பங்கு இல்லையா, பாடலே என்னுடையது என்கிறபோது பங்கு எப்படி இல்லாமல் போகும். பங்கு என்பது சிறிய தொகைதான். அதைக்கூட பெயருக்குத்தான் கேட்கிறேன். 

நாளைய தலைமுறைக்கு இது சரியான முக்கியமான நடவடிக்கையாக இருக்கும். முன்னோடி நடவடிக்கையாகவும் இருக்கும்" என அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close