யுவனின் தர லோக்கல் இசையில் 'ரவுடி பேபி' பாடல்!

  திஷா   | Last Modified : 28 Nov, 2018 12:00 pm
maari-2-single

நடிகர் தனுஷின் மாரி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியிருக்கிறது. முதல் பாகத்தைத் தொடர்ந்து, தர லோக்கல் திரைப்படமான மாரியின் இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் பாலாஜி மோகனே  இயக்கியிருக்கிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். 

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் 'ரவுடி பேபி' என்ற முதல் சிங்கிள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தப் பாடல் வெளியாகியிருக்கிறது. தனுஷ் எழுதியிருக்கும் இந்த 'ரவுடி பேபி' பாடலை, பாடகி தீ-யுடன் இணைந்து அவரே பாடியிருக்கிறார். பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் நடன இயக்குநர் பிரபுதேவா. இதற்கு தனுஷும் சாய் பல்லவியும் இறங்கி ஆடியிருப்பார்கள் எனத் தெரிகிறது. 

யுவனின் இசையில் தர லோக்கலாக அமைந்திருக்கும் இந்தப் பாடலுக்கு யுவன் - தனுஷ் சிகர்களிடையே லைக்குகள் குவிந்து வருகின்றன!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close