ரசிகர்களை மிகப் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாக்கியிருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் 10500 திரைகளில் நாளை வெளியாகிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஏமி ஜாக்சன் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் வில்லனாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படத்தை திரையில் பார்ப்பதற்கு ஆவலோடு இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் எந்திரனின் தயாரிப்பு நிறுவனமான 'சன் பிக்சர்ஸ்', ரஜினியின் 2.0 வெற்றிபெற லைகா நிறுவனத்திற்கும், படக்குழுவினருக்கும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.
எந்திரன் 2 என பெயரிட சன் பிக்சர்ஸ் அனுமதியளிக்காத காரணத்தால் தான் 2.0 எனப் பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சன் பிக்சர்ஸ் நிறுவனத்தாருக்கும், ஷங்கருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
Team #Petta wishes a grand success for #2Point0 !@rajinikanth @shankarshanmugh @arrahman @akshaykumar @iamAmyJackson @karanjohar @LycaProductions @karthiksubbaraj pic.twitter.com/PxYz2LlU66
இந்நிலையில், ரஜினியின் 2.0 இவர்களின் மனக்கசப்புகளை தீர்த்திருப்பதாக நம்புகிறார்கள் ரசிகர்கள். அதோடு சன் பிக்சர்ஸின் அந்த வாழ்த்து ட்வீட்டை லைக் செய்திருக்கிறார் ஷங்கர். தவிர ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் மற்றுமொரு தயாரிப்பு நிறுவனத்தை வாழ்த்தியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.