விஜய் படத்தில் கூடிய விரைவில் நடிப்பேன்: ரஷ்மிகா மந்தனா ட்வீட்

  சௌந்தரியா   | Last Modified : 28 Nov, 2018 01:49 pm
rashmika-mandana-clarifies-about-vijay-63

விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக வந்த தகவலை அவர் மறுத்துள்ளார். 

விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் அவர் தளபதி-63 படத்தில் நடிக்க இருக்கிறார் என்று பல தகவல்கள் வந்தன. ஆனால் நயன்தாரா தான் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதற்கு பின்னரும் ரசிகர்கள் விஜய்யுடன் ராஷ்மிகா நடிக்க வேண்டும் என்று கூறி பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். 

இதுகுறித்து ராஷ்மிகா தற்போது விளக்கம் அளித்துள்ளார், "விஜய் மற்றும் அட்லீயின் படத்தில் நான் நடிக்கின்றேனா என்று பலரும் என்னை தொடர்ந்து கேட்கின்றனர். தற்போது நான் நடிக்கவில்லை. விரைவில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கிறேன். உங்களிடம் இருந்து எனக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். விரைவில் நான் அறிமுகமாவேன். என்மீது காட்டும் அன்புக்கு நன்றி" என தெரிவித்துள்ளார். 

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close