ஜெர்மனியில் டிரோன் தொழில்நுட்பம் பயிலும் 'தல' அஜித்

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2018 01:55 pm

ajith-learning-drone-technology-in-germany

விஸ்வாசம் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் தல அஜித் தற்போது ஜெர்மனியில் டிரோன் தொழில்நுட்பம் பயின்று வருகிறார். இதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றில் ஆர்வத்தை காட்டும் அஜித், அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா எனப்படும் ஆளில்லா விமான குழுவின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இந்திய அளவில் பல சாதனைகளை புரிந்து வரும் தக்‌ஷா குழு அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. 

இந்நிலையில், அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. விஸ்வாசம் படப்பிடிப்பை முடித்த பின்னர், தன் குடும்பத்துடன் ஒரு வாரம் செலவிட்ட அஜித் பின்னர், வெளிநாடு சென்றதாக தகவல்கள் வெளியானது.

 

 

அதனைத்தொடர்ந்து, அஜித் ஜெர்மனி சென்றிருக்கிறார் எனவும் அங்கு ட்ரோன் தொழில்நுட்பங்களை கற்கிறார் எனவும் செய்திகளும் புகைப்படங்களும் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close