விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் லுக்!

  திஷா   | Last Modified : 28 Nov, 2018 04:04 pm

nayanthara-s-look-revealed-viswasam

பொங்கலுக்கு வெளியாகும் விஸ்வாசம் திரைப்படத்துக்கு, அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வீரம், விவேகம், வேதளம் ஆகியப் படங்களைத் தொடர்ந்து இதனையும் இயக்குநர் சிவாவே இயக்குகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 

‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார், இசையமைப்பாளர் டி.இமான். 

விஸ்வாசம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், மோஷன் போஸ்டர் என வெளியான அனைத்திலுமே அஜித்தின் லுக் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. ஹீரோயினான நயனோ, மற்ற நடிகர்களோ அதில் இடம் பெறாமல் இருந்தார்கள். 

இந்நிலையில், தற்போது நயன்தாராவின் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. சேலை, கழுத்தில் நகைகள் நெற்றி வகிட்டில் குங்குமம் என இருக்கும் நயன் இதில் அஜித்தின் மனைவியாக நடித்துள்ளார் என்பது இதன் மூலம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. 
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.