5வது முறையாக அஜித் படத்தை இயக்கும் சிவா... அதிர வைக்கும் விஸ்வாசம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 28 Nov, 2018 07:24 pm
5th-time-ajith-is-directing-siva

2008ல் சவுர்யம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த இயக்குநர் சிவாவுக்கு இது திரையுலகில் பத்தாவது வருடம்.

இதுரை எட்டுப்படங்களை இயக்கியுள்ள சிவா, தெலுங்கில் மூன்று படங்களையும், தமிழில் ஐந்து படங்களையும் இயக்கியுள்ளார். அதில் 4 படங்கள் தொடர்ச்சியாக அஜித்தை வைத்து இயக்கியுள்ளார். விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், சிவா இயக்கும் அடுத்த படத்திலும் அஜித்தே நடிக்க உள்ளார். தமிழில் அஜித் எப்பவுமே அப்படிதான் போல. ஒருவரை பிடித்துவிட்டால் கேட்பதை விட அதிகமாக கொடுத்துவிடுவது அவரது பாணி.

ஒரு படம் இயக்க வந்த சிவாவுக்கு அடுத்தடுத்து நான்கு படங்களை கொடுத்தவர், மேலும் ஒரு படத்தை வழங்க முடிவெடுத்துவிட்டார். அதே போல ஒரு சலுகை நடிகை ஸ்ரீதேவி குடும்பத்திற்கும் கொடுத்துள்ளார். தற்போது பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வரும் அஜித், அடுத்து இரண்டு படங்களுக்கான கால்ஷீட்டை போனிகபூர் குடும்பத்திற்கே கொடுத்திருக்கிறார்.

இதில் பிங்க் படத்தை சதுரங்கவேட்டை ஹெச்.வினோத் இயக்க, மற்றொரு படத்தை இயக்குநர் சிவாவே இயக்க இருக்கிறார். அஜித்திற்கு இருக்கும் வியாபார அந்தஸ்தை கருத்தில் கொண்ட ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் சந்தோசத்தின் உச்சத்தில் இருக்கிறார். விவேகம் தோல்வியடைந்த பிறகு விஸ்வாசம் படத்தை சிவா இயக்குவதை ஆரம்பத்தில் அஜித் ரசிகர்கள் விரும்பவில்லை. இப்போதுதான் உற்சாக மூடுக்கு வந்துள்ளனர்.

விஸ்வாசம் படமும் ஒருவேளை தோல்வியடைந்தால் ரசிகர்களின் ரியாக்சன் எப்படி இருக்குமோ..? ஆனால் தூக்குதுரை  துணிந்து இறங்கி விட்டார்!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close