தயாரிப்பாளர் கட்டாத வரி... அடாவடி இயக்குநரான ஹரி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 28 Nov, 2018 07:10 pm
hari-who-is-the-producer-of-the-untapped-taxpayer

எப்போதுமே கறார் பார்ட்டி இயக்குநர் ஹரி. இதற்கு முன் தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரும் செய்யாத கொடுமையை இயக்குனர் ஹரி செய்திருக்கிறார்.
விக்ரம் நடித்த சாமி ஸ்கொயர் படத்தை தயாரித்து தக்காளி சட்னியாகி விட்டார் அப்படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ். அந்தப்படத்தை இயக்க சுமார் எட்டு கோடி சம்பளத்தை ஹரிக்கு வழங்கியுள்ளனர்.  அதற்கான டி.டி.எஸ் தொகையையும் கட்டுவதாக ஷிபு தமின்ஸ் கூறியிருந்தாராம். ஆனால் படம் தோல்வி அடைந்ததால் அதனை கட்டவில்லை. இதனால் கடுப்பான ஹரி, நேரடியாக ஷிபு தமின்ஸ் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த கம்ப்யூட்டர், ஐபோன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பறிமுதல் செய்து வேனில் ஏற்றியவர், ‘டி.டி.எஸ் சர்டிபிகேட்டை கொடுத்துட்டு பொருளை வாங்கிக்கலாம்’ என்று முழங்கிவிட்டு கிளம்பினாராம். சிங்கம் படத்தில் வரும் சீன் மாதிரியே இருக்கிறதல்லவா? கோடி கோடியாக கொட்டி படம் எடுத்த ஷிபுவுக்கு எள்ளு. படம் இயக்கிய ஹரிக்கு எட்டு கோடி பில்லு! 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close