2.0 திரைப்படத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த பா.ரஞ்சித்

  திஷா   | Last Modified : 29 Nov, 2018 01:14 pm
pa-ranjith-s-tweet-on-2-0

நடிகர் ரஜினிகாந்தின் '2.0' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியிருக்கிறது. இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் எந்திரன் திரைப்படத்தின் அடுத்தப் பாகமாக இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனை அதிக பொருட்செலவில் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். 

'2.0' திரைப்படத்தைப் பாராட்டியும், வாழ்த்தியும் பல பிரபலங்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில், ரஜினியின் முந்தையப் படங்களான 'கபாலி, காலா' ஆகியத் திரைப்படங்களை இயக்கிய, இயக்குநர் பா.ரஞ்சித் ரஜினியின் 2.0 திரைப்படக் குழுவினரைப் பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார். 

"2.0 திரைப்படம் நிறைய எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 2.0 குழுவினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் வாழ்த்துகள்" என அந்த ட்வீட்டில் பதிவிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close