பாடல் காட்சியில் நடித்து முடித்த 'சைக்கோ' உதயநிதி!

  திஷா   | Last Modified : 29 Nov, 2018 01:33 pm
udhayanidhi-s-psycho-update

'நிமிர்' படத்திற்குப் பிறகு 'கண்ணே கலைமானே' என்றப் படத்தில் நடித்து முடித்து அதன் வெளியீட்டிற்குக் காத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இதனை இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருக்கிறார்.  

இதற்கடுத்து இயக்குநர் மிஷ்கின் இயக்கும் 'சைக்கோ' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் உதய். இதில் நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் மிஷ்கினின் நண்பரும் இயக்குநருமான ராம் நடிக்கிறார். 

தற்போது இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலின் படபிடிப்பு முடிந்திருப்பதாக, இரவு நேர படபிடிப்பில் எடுத்துக் கொண்ட படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் உதயநிதி. அதோடு இளம் குழுவினரோடு பணியாற்றியது, மிக மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். 

— Udhay (@Udhaystalin) November 29, 2018

டபுள் மீனிங் புரொடக்‌ஷன் நிறுவனம் சைக்கோ திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ள இந்தப் படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close