'தளபதி 63'யின் செட் அமைக்கும் பணிகள் துவக்கம்!

  திஷா   | Last Modified : 29 Nov, 2018 01:58 pm
thalapathy-63-update

சர்கார் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்தப் படத்திற்குத் தயாராகிவிட்டார் நடிகர் விஜய். தெறி, மெர்சல் ஆகியத் திரைப்படங்களுக்குப் பிறகு விஜய்யின் இந்தப் படத்தையும் இயக்குநர் அட்லீ இயக்குகிறார். 

விஜய்யின் 63-வது படமான இதனை ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நயன்தாரா ஹீரோயினாகவும், விவேக் காமெடியனாகவும் நடிக்கிறார்கள். மெர்சல், சர்கார் ஆகியப் படங்களைத் தொடர்ந்து விஜய்யின் 63-வது படமான இதற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவாளராகவும், டி.முத்துராஜ் கலை இயக்குநராகவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும், விவேக் பாடலாசிரியராகவும், அனல் அரசு ஸ்டன்ட் இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். 

இந்நிலையில், விஜய் 63 திரைப்படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் பூஜையுடன் தற்போது துவங்கியிருக்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close