2.0 படத்திற்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா

  Newstm Desk   | Last Modified : 29 Nov, 2018 02:14 pm
surya-wishes-2-0-team

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் 2.0 திரைப்படம் இன்னும் சில மணி நேரங்களில் உலக அளவில் வெளியாக உள்ளதி. 2.0 திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றி பெற வாழ்த்துகள் என நடிகர் சூர்யா  ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ் சினிமாவின் எல்லையை ரஜினி சார்  மிகப்பெரிய அளவில் விரிவாக்கியுள்ளார். ஜஸ்ட் லைக் தட் ஆக, கூடுதல் முயற்சி இல்லாமலேயே அவர் அதை சாதித்துள்ளார். எப்போதும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான். அது ரஜினி சார் மட்டும் தான்.

சங்கரின் பிரம்மாண்டமான கனவுகள் என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும். சினிமாவின் பலம் என்ன என்பதை நிருபித்தவர் சங்கர். ஏ.ஆர். ரஹ்மான் இசைக்கு மறு வடிவம் கொடுத்தவர். 2.0  இசை நிச்சயம் காதுகளில் ரீங்காரம் செய்யும்.

 

 

லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான முறையில் 2.0 படத்தை தயாரித்துள்ளார்கள். தமிழ் சினிமாவை உலகத் தரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். அக்‌ஷய் குமார் சாரின் வரவு தமிழ் சினிமாவுக்கு பெரிய விருந்தாக அமையும் என்பது நிச்சயம். 2.0 மிகப் பிரம்மாண்டமான வெற்றி பெற வாழ்த்துகள். இதை விட பெரிய சினிமா வர வாய்ப்பில்லை. 3D யில் வெளிவரும் 2.0 உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் மூழ்கடிக்கும் என்பது நிச்சயம்.” என்று நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2.0 திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close