இளம் இயக்குநருடன் கைக்கோர்க்கும் கார்த்தி!

  திஷா   | Last Modified : 29 Nov, 2018 02:46 pm

karthi-teams-up-with-a-critically-acclaimed-young-director

இயக்குநர் பாண்டிராஜின் 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்திற்குப் பிறகு, 'தேவ்' திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி. இதனை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்குகிறார். 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்திற்குப் பிறகு இந்தத் திரைப்படத்திலும் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். 

இவர்களுடன் 'நவரச நாயகன்' கார்த்திக் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் S. லட்சுமண் இதனை தயாரித்து வருகிறார். படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். 

இந்நிலையில், 'மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷுடன் கார்த்தி இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இதனைத் தயாரிக்கிறதாம். விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் பட்டியலுடன், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள் படக்குழுவினர். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.