தயாராகிறது 'நகைச்சுவை மன்னன்' சந்திரபாபுவின் பயோபிக்!

  திஷா   | Last Modified : 29 Nov, 2018 05:04 pm
chandra-babu-s-biopic-is-getting-ready

நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் சந்திரபாபு. 'நகைச்சுவை மன்னன்' என அழைக்கப்பட்ட இவர், நகைச்சுவை மட்டுமில்லாமல், பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் எனப் பல கலைகளில் கைத்தேர்ந்தவராக விளங்கியவர். 

‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘ஒண்ணுமே புரியல உலகத்தில’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ போன்ற பாடல்கள் இவரை காலம் கடந்தும் நினைவுக்கூறுகிறது. 

தற்போது இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இயக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

தமிழில் ‘அமரன், இதயத் தாமரை, கோவில்பட்டி வீரலட்சுமி' போன்ற படங்களை இயக்கிய கே.ராஜேஸ்வர், நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதிய 'ஜேபி: தி லெஜண்ட் ஆஃப் சந்திரபாபு' என்ற நாவலை எழுதியிருக்கிறார் .

தற்போது, இதனை படமாக இயக்க உள்ளாராம். சந்திரபாபுவின் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். 

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close