2.0 வெற்றி - அடுத்தப் படத்திற்கு நாள் குறித்த ஷங்கர்!

  திஷா   | Last Modified : 29 Nov, 2018 05:30 pm
indian-2-shooting-to-begin-from-dec14

இயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கும், 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியிருக்கிறது. ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் இதில் நடித்துள்ளார்கள். பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தரும் பாஸிட்டிவ் விமர்சனங்களால் பரவசம் அடைந்திருக்கிறார் அவர். 

இந்த வெற்றிக் களிப்போடு இந்தியனின் அடுத்தப் பாகத்தை இயக்கத் தயாராகிவிட்டார் ஷங்கர். நடிகர் கமல் ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்புகள் மேலோங்கிக் கிடக்கிறது. 

கமலுடன் இணைந்து, சிம்பு, துல்கர் சல்மான், நயன்தாரா, காஜல் அகர்வால் ஆகியோரும் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருக்கின்றன.  இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், முத்துராஜ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். 

இந்நிலையில் இதன் படபிடிப்பு டிசம்பர் 14-ம் தேதி துவங்க இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close