கஜா நிவாரணம் அளித்த ராட்சசன் டீம்!

  திஷா   | Last Modified : 29 Nov, 2018 06:00 pm
ratsasan-s-team-s-contribution-for-gaja-relief

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ராட்சசன். இதனை முண்டாசுப்பட்டி திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருந்தார். சைக்கோ த்ரில்லராக உருவாகியிருந்த இந்தத் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் விஷ்ணு . கிறிஸ்டோபர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார் சரவணன். அமலா பால், ராமதாஸ், காளி வெங்கட் உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இந்தப் படம்அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள் ராட்சசன் குழுவினர். இந்தத் தகவலை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார் இயக்குநர் ராம்குமார். 

அதனை ரீட்வீட் செய்திருக்கும் விஷ்ணு, இந்தச் சிறிய அர்ப்பணிப்பில் பங்கெடுத்தது மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close