சர்வம் தாள மயம் டைட்டில் ட்ராக் இன்று வெளியீடு!

  திஷா   | Last Modified : 03 Dec, 2018 12:49 pm

sarvam-thala-mayam-1st-single-from-today

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்திருக்கும் 'சர்வம் தாள மயம்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலோங்கிக் கிடக்கிறது. மின்சாரக்கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகியத் திரைப்படங்களுக்குப் பிறகு, ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜிவ் மேனன் இதனை இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க இசையை மையப்படுத்தி 'மியூஸிக்கல் ஃபிலிமாக' எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்கிறார். 

நெடுமுடி வேணு, வினித் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ராஜிவ் மேனனின் மைண்ட்ஸ்கிரீன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். 

சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்புப் பெற்ற நிலையில், சர்வம் தாள மயம் திரைப்படத்தின் டைட்டில் ட்ராக் பாடலை இன்று மாலை 4 மணிக்கு வெளியிட இருக்கிறார்கள் படக்குழுவினர். 

— A.R.Rahman (@arrahman) November 29, 2018

இந்தத் தகவலை படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானே தனது ட்விட்டரில் அறிவித்திருக்கிறார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close