காதலரை கை பிடிக்கும், ஸ்வேதா பாசு!

  திஷா   | Last Modified : 30 Nov, 2018 12:43 pm
actress-swetha-to-get-married-to-this-director

பாலியல் தொழிலில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்றவர் நடிகை ஸ்வேதா பாசு. குழந்தை நட்சத்திரமாக நடித்த போது தேசிய விருது பெற்றவர், பின்னர் ஹீரோயினாக சில படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு, இந்திப் படங்களில் படங்களில் நடித்துள்ளார். தமிழில் கருணாசுடன் ரா ரா, சந்தமாமா ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து, பாலியல் தொழில் செய்ததாக, ஸ்வேதாவை காவல்துறை 2014-ம் ஆண்டு கைது செய்தது. ஆனால், நான் யார் நிர்பந்தத்துடன் இத்தொழிலை செய்யவில்லை. என் வாழ்விற்காகவே இப்படி செய்தேன் என ஒப்புக்கொண்டார் அவர். அதன் பிறகு அவர் நடித்த 'சந்திர நந்தினி' எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து, ரசிகர்களிடம் வரவேற்புப் பெற்றார். 

இந்நிலையில், அந்த பிரச்னையின் போது உறுதுணையாக இருந்த ரோஹித் மிட்டல் என்னும் இந்தி இயக்குநரை ஸ்வேதா காதலித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் முடிந்தது. இவர்களின் திருமணம் வரும் 13-ம் தேதி நடக்கவிருப்பதாக, சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close