சீதக்காதி திரைப்படத்தின் 'அவன் துகள் நீயா' பாடல்!

  திஷா   | Last Modified : 30 Nov, 2018 01:01 pm
seethakathi-avan-lyric-video

'செக்க சிவந்த வானம்', '96' என அடுத்தடுத்த திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு, 'சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், பேட்ட, எஸ்.யூ.அருண்குமாரின் படம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. 

இதில் சீதக்காதி திரைப்படத்தை, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கிறார்.

விஜய் சேதுபதியின் 25வது திரைப்படமான இதில், இயக்குநர் மகேந்திரன், அர்ச்சனா, பார்வதி நாயர், ரம்யா நம்பீசன், காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசை 96-ன் இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா. 

ஏற்கனவே இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் 'அய்யா' என்ற முதல் சிங்கிள் வெளியாகியிருக்கும் நிலையில், தற்போது 'அவன் துகள் நீயா' என்ற இரண்டாவது பாடலும் வெளியாகியிருக்கிறது. 

வயதான கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close