25 நாட்களைக் கடந்த விஜய்யின் 'சர்கார்'!

  திஷா   | Last Modified : 30 Nov, 2018 01:09 pm
sarkar-25th-day

தீபாவளிக்கு வெளியாகி, ரசிகர்களின் பேராதரவோடு திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது சர்கார். நடிகர் விஜய் நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். துப்பாக்கி, கத்தி ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால், அதிகாரப்பூர்வமாக படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே இதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. 

அரசியல் படமான இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த சர்கார் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அடம் வெளியாகி நிறைய சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்தது. இந்நிலையில், இந்தத் திரைப்படம் வெளியாகி இன்றோடு 25 நாட்களைக் கடந்திருக்கிறது. 

இதனை ட்விட்டரில் அறிவித்திருக்கும் சன் பிக்சர்ஸ், "ப்ளாக் பஸ்டர் சர்கார் 25 நாட்களைக் கடந்திருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்கள். 

ரஜினியின் 2.0 வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் இத்தருணத்தில், சர்கார் தொடர்ந்து ஓடி பாக்ஸ் ஆஃபிஸ் பந்தயத்தில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துப் பார்க்கலாம். 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close