துவங்கியது! பாட்டியாக நடிக்கும் சமந்தாவின் படம்

  திஷா   | Last Modified : 30 Nov, 2018 01:34 pm
samantha-s-miss-granny-remake-on-floors

'யூ டர்ன்' திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடித்து வருகிறார் நடிகை சமந்தா. இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். தவிர, நாக சைத்தன்யாவுடன் இணைந்து, 'மஜிலி' என்ற படத்திலும் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் சாம். 

இந்நிலையில் இவர் 'மிஸ் கிரான்னி' என்ற கொரிய படத்தின் ரீமேக்கில் நடிக்கும் விஷயம் சில நாட்களுக்கு முன்பே வெளியானது. 70 வயது பாட்டி ஒருவர் போட்டோ எடுத்ததும், அவர் 20 வயது பெண்ணின் உடலுக்கு வந்து விடுவது தான் மிஸ் கிரான்னி படத்தின் மையக்கரு.

அந்த பாட்டியின் 20 வயது கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க உள்ளது நாம் அறிந்ததே. மிஸ் கிரான்னி திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்குகிறார். இதில் 'தியா' படத்தில் நடித்த, நாக செளரியா ஹீரோவாக நடிக்கிறாராம். இவர் ஏற்கனவே நந்தினியின் இயக்கத்தில் 'கல்யாண வைபோகமே' படத்தில் நடித்தவர். 

இந்நிலையில், மிஸ் கிரான்னி ரீமேக்கிற்கான படபிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close