ஒரு தலை ராகம் படத்தின் ஒளிப்பதிவாளர் காலமானார்

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 01:23 pm
senior-cinematographer-robert-ashirvatham-passed-away

ஒரு தலை ராகம், சின்னபூவே மெல்ல பேசு உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ராபர்ட் ஆசிர்வாதம் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். 

டி.ராஜேந்திரன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஒரு தலை ராகம். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி அனைவரது கவனத்தையும் பெற்றவர் ராபர்ட். மேலும் இவர் சின்னபூவே மெல்ல பேசு, குடிசை, பாலைவனச்சோலை உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றி உள்ளார். இவர் அடையாறு ஃபிலீம் இன்ஸ்டிடியூட்டில் ஆசிரியராகவும் இருந்துள்ளார். 

இவர் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close