யூ-ட்யூப் ட்ரெண்டிங் முதலிடத்தில் 'ரவுடி பேபி'!

  திஷா   | Last Modified : 30 Nov, 2018 03:59 pm
rowdy-baby-trending-1-on-youtube

நடிகர் தனுஷின் தர லோக்கல் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 
முதல் பாகத்தைத் தொடர்ந்து, மாரியின் இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் பாலாஜி மோகனே  இயக்கியிருக்கிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். 

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

சமீபத்தில் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் 'ரவுடி பேபி' என்ற பாடல் வெளியானது. இந்தப் பாடலை தனுஷே எழுதி, பாடகி தீ யுடன் இணைந்து பாடியுள்ளார். 

இந்தப் பாடல் வெளியாகி 2 நாட்களாகியிருக்கும் நிலையில், 4.6 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து தற்போது யூ-ட்யூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close