2.0 - இவரின் தழுவல் தான் அக்‌ஷய் குமாரின் கதாபாத்திரம்!

  திஷா   | Last Modified : 30 Nov, 2018 03:35 pm
know-who-was-the-inspiration-for-akshay-s-character-in-2-0

இயக்குநர் ஷங்கர் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் மூன்றாவதாக இயக்கப் பட்டிருக்கும் திரைப்படம் 2.0. இந்தத் திரைப்படம் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது. ‘எந்திரன்' படத்தின் 2-ம் பாகமான இதனை ‘லைகா புரொடக்‌ஷன்' நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் அதிக பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறார். 

இதில் ரஜினியுடன் இணைந்து அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப் படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

வில்லனாக மிரட்டியிருக்கும் அக்‌ஷய் குமார், ஃபிளாஷ் பேக்கில் பட்சி ராஜன் என்ற பறவைகள் ஆர்வலராக நடித்திருப்பார். இந்தக் கதாபாத்திரம் பறவையியல் வல்லுநர் சலீம் அலி என்பவரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close