ராயல்ட்டி பத்திரத்தை தகுந்த இடத்தில் ஒப்படைத்த இளையராஜா!

  திஷா   | Last Modified : 30 Nov, 2018 04:06 pm
ilayaraja-copy-rights-update

இசை ரசிகர்களின் வாழ்வில் ஒன்றாகக் கலந்து விட்ட இசைஞானி இளையராஜா தான் இசையமைத்தப் பாடல்களுக்கு காப்புரிமை பெற்று, ராயல்ட்டி கோருகிறார் என்ற சர்ச்சை மறுபடியும் வெடித்துள்ளது. இந்த முறை அவர், மேடைப்பாடகர்கள் தாங்கள் வாங்கும் தொகையில், ஒரு சிறு தொகையை ராயல்ட்டியாக தரும்படி சில தினங்களுக்கு முன்னர் வீடியோ வெளியிட்டிருந்தார் அவர்.  

அந்தத் தொகை நலிந்த இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் என முன்பே அறிவித்தும் இருந்தார். அதன் படி இன்று, தனது காப்புரிமையின் ராயல்ட்டி தொகையை, முறைப்படி அவர்களே பெற்றுக்கொள்ள பத்திரம் எழுதி கொடுத்திருக்கிறார். 

"அவர் பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை அவர் பயன்படுத்தப் போவது இல்லை. இளையராஜா சட்ட போராட்டம் நடத்தியதே, இந்த கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கான பிற்கால வருமானமாக அது இருக்க வேண்டும் என்பதற்காகத் தான்" என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். 

அதனை முறைப்படி திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் இசையமைப்பாளர் தீனாவிடம் வழங்கியிருக்கிறார் இசைஞானி. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close