2.0-வைத் தொடர்ந்து ரஜினியின் மாஸ்டர் பிளான்!

  திஷா   | Last Modified : 30 Nov, 2018 04:19 pm
thalaivar-166-update

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘காலா' திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0' திரைப்படம் நேற்று ரிலீஸாகியிருக்கிறது. இயக்குநர் ஷங்கரின் கலை வண்ணத்தில் செதுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

1995-ம் ஆண்டு ரஜினியின் பாட்ஷா, முத்து என இரண்டு படங்கள் வெளியாகி, மாபெரும் வெற்றிப் பெற்றிருந்தது. அதன் பிறகு 23 ஆண்டுகள் கழித்து இந்தாண்டு காலா, 2.0 என இரண்டு படங்கள் வெளியாகியிருக்கின்றன. 

இதற்கிடையே 2014-ல் கோச்சடையான், லிங்கா என இரு படங்கள் வெளியானாலும், கோச்சடையான் 'மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில்' இயக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ரஜினி, இதற்கடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரின் கரியரில் 166-வது படம். 

போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ள 'பேட்ட' பொங்கலுக்கு வெளியானதும், சிறு ஓய்வு எடுத்துக் கொண்டு ஏ.ஆர்.முருகதாஸின் படத்தை மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டிருக்கிறாராம் ரஜினி. 

இது குறித்த அதிகாரப்பூர்வஆறிவிப்பு 'பேட்ட்' ரிலீஸுக்குப் பிறகு இருக்கும் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close