வசூல் சாதனைகளை தகர்த்தெறிந்த 2.0

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 05:34 pm
2-0-breaks-box-office-records

ரஜினிகாந்தின் எந்திரன் 2.0 படம், முதல் நாளிலேயே தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. முக்கியமாக சென்னையில் சர்கார் படம் படைத்த வரலாறு காணாத சாதனையை 2.0 எளிதாக முறியடித்துள்ளது. 

நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான 2.0, ரசிகர்களிடையே இமாலய வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் 10,000 திரைகளில் இந்த படம் ரிலீசாகி வசூல் சாதனை படைக்க தயாராகி வருகிறது. பொதுவாகவே தீபாவளி பொங்கலுக்கு ரிலீசாகும் படங்கள்தான் முதல் நாளிலேயே வசூல் சாதனைகளை படைக்கும். சமீபத்தில் இளையதளபதி விஜய்யின் சர்கார், முதல் நாளிலேயே அனைத்து சாதனைகளையும் முறியடித்து சாதனை படைத்தது நினைவிருக்கும். தற்போது அந்த சாதனையை 2.0 முறியடித்துள்ளது

சென்னையில் வரலாறுகாணாத அளவு சர்கார் 2.37 கோடி ரூபாய் வசூலித்து சாதனையை படைத்தது. தற்போது 2.0, சென்னையில் 2.64 கோடி ரூபாயை முதல் நாளிலேயே வசூலித்து அந்த சாதனையை முறியடித்துள்ளது. இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் படம் ரிலீசாகி உள்ளதால், மொத்தமாக சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அனைத்தையும் சேர்த்து பார்க்கும் போது முதல் நாள் மட்டுமே 2.0, நூறு கோடி ரூபாய் வசூலிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் அமீர் கான், அமிதாப் நடிப்பில் வெளியான தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படம் 50 கோடி வசூலித்து சாதனை படைத்த நிலையில், அதை 2.0 மிகவும் எளிதாக உடைத்துள்ளது. இதையெல்லாம் வைத்து பார்த்தாலும் கூட இந்தியாவிலேயே அதிக வசூல் செய்யும் இரண்டாவது படமாக 2.0 உருவெடுக்கும். கடந்த ஆண்டு வெளியான 'பாகுபலி 2' படைத்த 121 கோடி ரூபாய், இப்போதைக்கு முதலிடத்தில் தொடர்கிறது.

2.0வின் சாதனைகளை, அடுத்து முறியடிக்கப் போகும் படம் விஸ்வாசமா?, பேட்டயா? பொறுத்திருந்து பார்ப்போம்...

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close