2.0 திரைப்படத்திற்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு அப்படத்தின் இயக்குநர் சங்கர் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
திரைக்கு வந்துள்ள 2.0 திரைப்படத்திற்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கும் படத்தில் தங்களது வாழ்க்கையில் ஒரு பகுதியை கொடுத்து பணியாற்றிய படக்குழுவினருக்கும் நன்றி என்று அப்படத்தின் இயக்குநர் சங்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் திரைப்படம் 2.0. இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள இதில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திரைப்படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலர் ட்விட்டரில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
My heart full thanks to the audience who have lapped up #2point0 and celebrated and made it a huge success, and to all the media who supported and respected the hard work of our team, and to my whole team who have given a piece of their life to 2.0.
— Shankar Shanmugham (@shankarshanmugh) November 30, 2018
🙏🙏🙏
இந்நிலையில் பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குநர் சங்கர் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "2.0 திரைப்படத்தை பார்த்து அதனை கொண்டாடி வரும் ரசிர்களுக்கும், எங்களின் கடுமையான உழைப்பை மதித்து ஆதரவளித்திருக்கும் ஊடகங்களுக்கு நன்றி. மேலும் தங்களது வாழ்க்கையின் ஒரு அங்கத்தை இந்த படத்திற்காக கொடுத்து பணியாற்றிய படக்குழுவினருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
newstm.in