முதல் நாள் வசூல் சாதனைப் படைத்த ரஜினியின் 2.0!

  திஷா   | Last Modified : 01 Dec, 2018 09:51 am
2-0-rajini-s-first-day-record

நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகியிருக்கும் 2.0 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கும் இந்தப் படம் எந்திரனின் அடுத்த பாகமாக வெளிவந்திருக்கிறது. 

2.0 திரைப்படம் வெளியான முதல் நாளில் சென்னை நகரத்தில் மட்டும், 2.64 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். இது தீபாவளிக்கு வெளியான சர்கார் (2.37 கோடி) திரைப்படத்தின் வசூலை மிஞ்சியிருக்கிறது. 

முதல் நாள் வசூலின் படி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 18.2 கோடி, கர்நாடகாவில் 8.25 கோடி, கேரளாவில் 4.15 கோடி என தென்னிந்தியாவில் சாதனை படைத்துள்ளது. குறிப்பாக கேரளாவில், அதிக வசூல் செய்த நான்காவது 'நான் - மலையாள' திரைப்படம் என்ற பெருமையும் பெற்றிருக்கிறது. இது வரை சர்கார் (5.62 கோடி), பாகுபலி (5.45 கோடி), மெர்சல் (4.65 கோடி) என மூன்று படங்கள் இந்த சாதனையைப் படைத்துள்ளன. 

தவிர, வட மாநிலங்களான டெல்லி, உத்திரபிரதேசம், பஞ்சாப், பிகார் ஆகிய இடங்களிலும் முதல் நாளில் வசூல் சாதனைப் படைத்துள்ளது ரஜினியின் 2.0. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close