கஜா பாதிப்பு வருத்தமளிப்பதாக அமீர்கான் ட்வீட்: நன்றி தெரிவித்த கமல்

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 09:51 am
aamir-khan-tweet-about-gaja

கஜா புயல் பாதிப்புகளை பற்றி அறிந்து வருத்தமடைந்ததாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் ஆன பங்களிப்பை செய்வோம் என்றும் இந்தி நடிகர் அமீர்கான் ட்வீட் செய்துள்ளார். 

கஜா புயல் பாதிப்புகள் குறித்து ட்விட்டரில் நடிகர் அமீர் கான் வெளியிட்டுள்ள ட்விட்டர் கருத்தில், “தமிழ்நாட்டில் கஜா புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதங்களை அறிந்து வருத்தமடைந்தேன். அங்கு பாதிக்கப்பட்டிருக்கும் நமது சகோதர சகோதரிகளுக்கு உதவ நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். நம்மால் முடிந்த ஏதேனும் வழியில் பங்காற்ற முயற்சிப்போம்” என தெரிவித்துள்ளார்.

 

— Aamir Khan (@aamir_khan) November 30, 2018

 

அமீர்கானின் இந்த கருத்துக்கு நடிகரும் மக்கள் மய்யம் தலைவருமான கமல் ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், "மிக்க நன்றி அமீர் ஜி. உங்களை போன்றவர்கள் தான் இந்தியா ஒரே நாடு என்ற எண்ணம் வருகிறது" என தெரிவித்துள்ளார். 

 

— Kamal Haasan (@ikamalhaasan) November 30, 2018

மேலும் நாடு முழுக்கு அனைவரும் 2.0 படத்தை பற்றி பேசும் போது அமீர் கான் கஜா பற்றி பதிவிட்டதற்கு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close