யுவனின் என்.ஜி.கே அப்டேட் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

  திஷா   | Last Modified : 01 Dec, 2018 10:36 am

ngk-yuvan-tweet

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் பரபரப்பாகி விட்டார். தற்போது கொலையுதிர் காலம், மன்னவன் வந்தானடி, மடை திறந்து, என்.ஜி.கே, கண்ணே கலைமானே, எரியும் கண்ணாடி, பிங்க் ரீமேக் ஆகிய படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.  

இதில் என்.ஜி.கே படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்குகிறார். இதில் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி நடிக்கிறார்கள். 

இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள். 

இந்நிலையில், என்.ஜி.கே படத்திற்காக பாடகி ஷ்ரேயா கோஷலும், பாடகர் சித் ஶ்ரீராமும் இணைந்து பாடிய பாடலின் ரெக்கார்டிங் தற்போது முடிவடைந்திருக்கிறது என, இசையமைப்பாளர் யுவன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

அதனை ரீ ட்வீட் செய்திருக்கும் செல்வா, "இந்த மாதிரி ஆசிர்வதிக்கப்பட்ட பாடகர்கள் கிடைத்ததற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதன் மூலம் யுவன் - ஷ்ரேயா - சித் இவர்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் அந்தப் பாடலின் எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.