கொடூரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவன் நான் - செல்வராகவன் உருக்கம்!

  திஷா   | Last Modified : 01 Dec, 2018 10:42 am
selva-raghavan-tweet

தனது வித்தியாச படைப்புகளால் ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் செல்வராகவன். தற்போது என்.ஜி.கே படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். சூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என 2 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். 

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில், உருக்கமான பதிவொன்றை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார் செல்வா. அதில், "கொடுரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவன் நான்.இரு வேளை உண்டால்  அரிது.அண்டை வீட்டுக்காரர்களின் அன்பு காப்பாற்றியது. ஆயின் சமூகம் கேலி செய்யும்.நீ எல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய் என.எனக்கு தோள் கொடுத்து என் ரசிகர்கள் சாதித்தனர்.அதனால்தான் அவர்கள் மட்டுமே என் நண்பர்கள்!" எனத் தெரிவித்திருக்கிறார். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close