பிரச்னையில் அதர்வாவின் அடுத்தப்படம்!

  திஷா   | Last Modified : 01 Dec, 2018 12:15 pm

will-atharva-s-minnal-veeran-take-off

'மின்னல் வீரன்' என்ற படத்தில் நடிகர் அதர்வா நடிப்பதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகியிருந்தன. 

ஆனால் தற்போது, படத்தைத் தயாரிக்கும் மதியழகன், "6 மாதங்களுக்கு முன்பே சரவணுடன் ஒப்பந்தம் போட்டிருந்தோம். அப்போது அதர்வா நடித்து தயாரித்த 'செம்ம போத ஆகாத 'படம் அதிக இழப்புகளை சந்தித்தது. அப்போது நான் தான் அவருக்கு உதவினேன். இழப்பிலிருந்து மீண்டு வந்ததும் எங்களுடைய படத்தில் நடித்துத் தருவதாக அதர்வா கூறினார். 

பார்வதி நாயரை ஹீரோயினாகவும், இமானை இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்தோம். செம்ம போத ஆகாத வெளியாகி 2 மாதங்கள் கழிந்த நிலையில், அதர்வாவும் எங்கள் படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். ஆனால் இரண்டரை மாதமாக சரவன் எங்கள் ஃபோனை எடுப்பதில்லை. அட்வான்ஸ் கூட வாங்கியிருக்கிறார். இதுவரை நான் 1.5 கோடி செலவு செய்திருக்கிறேன். இப்போது இந்தப் படத்திற்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி ட்வீட் செய்திருக்கிறார். ஏன் இப்படி செய்கிறார் எனத் தெரியவில்லை" என்றார். 

"ஆம் நான் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதெல்லாம் உண்மை தான். ஆனால் மதிக்கும் அதர்வாவுக்கும் இடையில் இருந்த பொருளாதார பிரச்னையில், என்னை காக்க வைத்தனர். இப்போது எனக்கு வேற மனநிலை வந்துவிட்டது. இவர்களின் தாமதத்தால் வேறு கதை களத்தில், புதிய கதையை மனம் யோசித்துவிட்டது, என்னுடைய தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறேன், பார்ப்போம்" என்றார். 

அதர்வாவின் இந்த மின்னல் வீரன் படம் இயக்கப்படுமா இல்லையா என்பது இப்போது கேள்விக்குறியாக உள்ளது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.