ஜீவா - அருள்நிதியுடன் இணைந்த மஞ்சிமா மோகன்!

  திஷா   | Last Modified : 01 Dec, 2018 12:56 pm

manjima-joins-jiiva-arulnidhi-s-film

நடிகர்கள் ஜீவாவும், அருள்நிதியும் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தப் படத்தை 'மாப்ள சிங்கம்' படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்குகிறார். தற்போது இதில் ஹீரோயினாக நடிக்க, மஞ்சிமா மோகன் கமிட்டாகியிருக்கிறார். 

இந்தப்படம் நட்பின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லும் படமாக இயக்கப்படவிருக்கிறதாம். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பில், ஜித்தன் ரமேஷ் இதனை தயாரிக்கிறாராம். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. 

"நட்பின் ஆழத்தை எடுத்துச் சொல்லும் படமாக 'தளபதி' விளங்குகிறது. அதே மாதிரியான களத்தில் தான் இந்தப்படம் இயக்கப்படவிருக்கிறது. இதன் படபிடிப்பு  வரும் 13-ம் தேதி தொடங்குகிறது. எங்கள் நிறுவனம் தயாரிக்கும் 90-வது படம் இது" என்றார் ரமேஷ். 

கீ, கொரில்லா, ஜிப்ஸி ஆகியப் படங்களில் ஜீவாவும், புகழேந்தி எனும் நான் மற்றும் பரத் நீலகண்டனின் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் அருள்நிதியும் நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close