மீட் மிஸ்டர் 3.0: அக்‌ஷய் வெளியிட்ட குட்டி ரஜினி வீடியோ

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 02:02 pm
akshay-kumar-released-3-0-video

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியாகி உள்ள 2.0 படத்தின் முக்கியமான காட்சியை அந்த படத்தில் நடித்துள்ள நடிகர் அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

ரஜினிகாந்த் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் 2.0. பிரமாண்ட இயக்குநர் சங்கர் இயக்கி இருக்கும் இந்த படத்தில் அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

பல ஆண்டுகள் உழைப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை  நடிகர் அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ளார். 

 

 

எந்திரன் படத்தில் வெர்ஷன் 2.0வை அறிமுகப்படுத்தி இருப்பர். அந்த ரோபோ தான் 2.0 படத்தில்  முக்கியமான காட்சிகளில் வரும். இதே போல 2.0 படத்தில் அடுத்த படத்தில் முக்கிய பாத்திரமாக இருக்க போகும் 3.0 ரோபோவை அறிமுகப்படுத்தி இருப்பர். 

அந்த காட்சி தான் படத்தில் திருப்புமுனையாக இருக்கும். தற்போது அந்த காட்சிகளை நடிகர் அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close