ஷங்கரின் கமாண்டர்களுக்கு ராயல் சல்யூட் - சிம்புத்தேவன்!

  திஷா   | Last Modified : 01 Dec, 2018 03:15 pm
royal-salute-to-shankar-sir-s-important-commanders

இயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கும் 2.0 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டிருக்கும் இதனை, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் பிரமாண்டமாகத் தயாரித்திருக்கிறது. 

வசீகரன், சிட்டி, குட்டி என ரஜினிகாந்த் அசத்தியுள்ளார். பட்ஷி ராஜனாக பறவை ஆர்வலர் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் மிரட்டியிருக்கிறார். நிலாவாக ஏமி ஜாக்‌ஷன் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

இந்நிலையில் 2.0 திரைப்படத்தைப் பார்த்த அனைவரும் இயக்குநர் ஷங்கருக்கும், குழுவினருக்கும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். 

அந்த வகையில், இம்சையரசன் 23-ம் புலிகேசி, புலி போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சிம்புத்தேவன், "இது ஷங்கர் சாரின் வெற்றி மிகு நாள். ரஜினி காந்த், அக்‌ஷய் குமார், லைகா புரொடக்‌ஷன் அனைவருக்கும் வாழ்த்துகள். ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரத்தமும் வியர்வையும் தெரிகிறது. ஷங்கர் சாரின் கமண்டர்களான ஏ.ஆர்.ரஹ்மான், நீரவ் ஷா, முத்துராஜ், ஶ்ரீநிவாஸ் மோகன், ஆண்டனி ஆகியோருக்கு எனது ராயல் சல்யூட் " என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close