எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மீண்டும் ரம்யா கிருஷ்ணன்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 01 Dec, 2018 05:17 pm
sivagami-to-enter-rrr

பாகுபலி-2 படத்தைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் படத்தில் மீண்டும் ரம்யா கிருஷ்ணன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்திய சினிமாவை உலகத்தரத்தில் கொண்டு சேர்த்த படம் பாகுபலி. இதனைத் தொடர்ந்து என்.டி.ஆர்- ராம்சரண் நடிப்பில் #ஆர்ஆர்ஆர் என தற்காலிக பெயர் சூட்டப்பட்ட படத்தை இயக்கி வருகிறார் எஸ்.எஸ்.ராஜமவுலி. கதாநாயகி இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. கதாநாயகர்களை தவிர பாகுபலியில் பணியாற்றிய பலரும் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் பாகுபலி படத்தில் ராணி சிவகாமி பாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் இந்தப்படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பவர்புல்லான சிவகாமி பாத்திரத்தைப் போலவே இந்தப்படத்திலும் அழுத்தமான கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இதில் ராம்சரனுக்கு தாயாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளார். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். 

ரம்யா கிருஷ்ணன் நடிப்பதால் கட்டப்பா கேரக்டரில் அசத்திய சத்யராஜ் இந்தப்படத்தில் நடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close