சாமி 2 திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்துடன் 'பேட்ட' திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் பாபி சிம்ஹா, அதனை பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், நவாஸுதீன் சித்திக் என பலர் நடித்துள்ளனர்.
தவிர, பாபி சிம்ஹாவின் நடிப்பில் இயக்கப்பட்டிருக்கும் அக்னிதேவ் படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் அவர் ஒரு 'வெப் சீரியலில்' நடிக்கும் செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.
Presenting the Teaser of our Digital Series #VellaRaja. https://t.co/giaqL3RRSE #VellaRajaFromDec7 @PrimeVideoIN @prabhu_sr @actorsimha @paro_nair #DreamWarriorPictures
— DreamWarriorPictures (@DreamWarriorpic) December 1, 2018
அமேஸான் ப்ரைமில் ஒளிபரப்பாகும் இதனை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. "வெள்ள ராஜா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியலில், பாபி சிம்ஹாவுடன் பார்வதி மற்றும் காயத்ரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். வரும் 7-ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் இதன் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது.