ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!

  திஷா   | Last Modified : 02 Dec, 2018 09:53 am

actor-vijay-visits-nasser-house-to-celebrate-his-son-s-birthday

நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர் என்பதை அனைவரும் அறிவர். பொதுமக்கள் மட்டுமில்லாமல், பல பிரபலங்களும், அவர்களின் குடும்பத்தினரும் விஜய்யின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். 

அந்த வகையில் நடிகர் நாசரின் மகன் ஃபைசல் தீவிர விஜய் ரசிகர். சில வருடங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கிய ஃபைசல், கடந்த நான்காண்டுகளாக வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். நேற்று அவரின் பிறந்தநாள். பிறந்தநாளுக்கு விஜய் வந்தால் எப்படி இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்த ஃபைசலின் கனவு நினைவாகியிருக்கிறது. 

நாசர் வீட்டுக்கு சென்று கேக் வெட்டி, ஃபைசலின் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார் விஜய். பிறந்தநாள் படங்களை ட்விட்டரில் பகிர்ந்த கமீலா நாசர், "ஃபைசல், விஜய் அண்ணனுடன் உனது கனவு நினைவாகியிருக்கிறது, பிறந்தநாள் வாழ்த்துகள்" என வாழ்த்தியிருக்கிறார். 

— Kameela (@nasser_kameela) December 1, 2018

தவிர, விபத்தில் சிக்கிய போது, இடைப்பட்ட காலங்களில் என அவ்வப்போது, ஃபைசலை சந்திக்கிறார் விஜய். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close