பாண்டிச்சேரியில் படமாகும் விஷாலின் அயோக்யா!

  திஷா   | Last Modified : 02 Dec, 2018 11:56 am
vishal-s-ayokya-update

இரும்புத்திரை, சண்டக்கோழி ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு நடிகர் விஷால் 'அயோக்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக இருந்த வெங்கட் மோகன் இயக்குகிறார்.  

இந்தப் படத்தில் ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் விஷாலுடன் இணைந்து முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்க ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

தற்போது இதன் படபிடிப்பு பாண்டிச்சேடியில் பரபரப்பாக நடந்து வருகிறதாம். 20 - 25 நாட்கள் அங்கு படபிடிப்பு நடந்து முடிந்ததும், உடனடியாக போஸ்ட் புரொடக்‌ஷனை தொடங்கி விரைவில் படத்தை வெளியிட இருக்கிறார்களாம் படக்குழுவினர். 

 அதன் பிறகு இயக்குநர் சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஷால்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close